இரத்த சர்க்கரை என்றால் என்ன?
இரத்த சர்க்கரை என்றும் அறியப்படும் இரத்த க்ளுக்கோஸ், இரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸின் (ஒரு வகை சர்க்கரை) அளவை குறிக்கும். உடலின் அணுக்களுக்கான ஆற்றலின் முக்கிய மூலாதாரமாக அமைவது க்ளுக்கோஸ், மேலும் இரத்த ஓட்டத்தின் வழியே உடலின் திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றலை கொண்டு செல்வது.
நம் உடல் இரத்த க்ளுக்கோஸ் அளவை கணையத்தில் உருவாகும் ஹார்மோன்களான இன்சுலின் மற்றும் க்ளுக்கோகானின் செயல்பாட்டின் மூலம் முறைப்படுத்துகிறது. உயிரணுக்கள் க்ளுக்கோஸ் எடுக்கும் அளவை மேம்படுத்தியும், கல்லீரலில் க்ளுக்கோஸை க்ளைகோஜனாக (தேக்கிய க்ளுக்கோஸின் ஒரு வடிவம்) மாற்றியும் ரத்த க்ளுக்கோஸ் அளவை குறைக்க, இன்சுலின் உதவுகிறது. மறுபுறம், கல்லீரலில் க்ளைக்கோஜனை முறித்தும் தேக்கிய கொழுப்புகளை க்ளுக்கோஸாக மாற்றியும் இரத்த க்ளுக்கோஸ் அளவை உயர்த்த க்ளுக்கோகான் உதவுகிறது.
இயல்பான ரத்த க்ளுக்கோஸ் அளவு என்பது, ஆரோக்கியமான ஒருவருக்கு பொதுவாக 70 -100 மிகி/டெ.லி (மில்லிகிராம் பெர் டெஸிலிட்டர்) உணவருந்துவதற்கு முன்பாகவும், 149 மிகி/டெ.லி வரையான அளவு உணவருந்தியதற்கு பின்பாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த க்ளுக்கோஸ் அளவு குறைந்தோ அதிகரித்து அமையலாம். உயர் இரத்த க்ளுக்கோஸ் அளவு (ஹைப்பர் க்ளைசீமியா) நீரிழிவு நோய் உள்ளவர்கள், நீரிழிவுக்கு முந்தைய நிலையான முன் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இடையிலும், சில நேரங்களில் நிரிழிவு நோய் இல்லாதவர்களிடமும் காணப்படலாம். இவர்களிடையே உயர் தாகம், அயர்ச்சி மற்றும் அதிகளவு சிறுநீர் போதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். குறைவான இரத்த க்ளுக்கோஸ் அளவு (ஹைப்பர் க்ளைசீமியா) இன்சுலின் அல்லது குறிப்பிட்ட நிரிழிவு நோய் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளர்களிடம் காணப்படலாம். இவர்களிடம் நடுக்கம், வேர்த்தல் மற்றும் குழப்ப நிலை ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, உணவுக்கட்டுப்படு, உடற்பயிற்சி, மன அழுத்தம், மருந்துகள் உட்கொள்வது மற்றும் நோய்கள் இருப்பது இரத்த க்ளுக்கோஸ் அளவை பாதிக்கும் என்பதாகும். எனவே இரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பதும், நீரிழிவு நோய், முன் நீரிழிவு நோய் மற்றும் க்ளுக்கோஸ் வளர்ச்சிதைமாற்றத்தை பாதிக்கும் பிற நிலைமைகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்காகும்.
இரத்த சர்க்கரை வகைகள்
இரத்த க்ளுக்கோஸில், உணவுக்கு முன் இரத்த க்ளுக்கோஸ் மற்றும் போஸ்ட் பிராண்டியல் (உணவுக்கு பின்) இரத்த க்ளுக்கோஸ் ஆகிய இரண்டு முக்கிய வகைகள் உண்டு.
இரத்த க்ளுக்கோஸில், உணவுக்கு முன் இரத்த க்ளுக்கோஸ் மற்றும் போஸ்ட் பிராண்டியல் (உணவுக்கு பின்) இரத்த க்ளுக்கோஸ் ஆகிய இரண்டு முக்கிய வகைகள் உண்டு.
உணவுக்கு முன் ரத்த க்ளுக்கோஸ்
குறைந்தது 8 மணி நேரம் உணவருந்தாத இரவு கழிந்த நிலையில் இருப்பது இந்த வகை இரத்த க்ளுக்கோஸ் அளவாகும். பொதுவான உணவுக்கு முன் இரத்த க்ளுக்கோஸ் அளவு 70-100 மி.கி/டெ.லி (3.9 to 5.6 mmol/L).
இது உணவருந்தியதற்கு பின்பான இரத்த க்ளுக்கோஸ் அளவாகும். உணவருந்த தொடங்கியதற்கு பிறகு 1-2 மணி நேரத்தில் இது அளவிடப்படும். பொதுவான போஸ்ட் பிராண்டியல் (உணவுக்கு பின்) ரத்த க்ளுக்கோஸ் அளவு 140 மி.கி/டெ.லி-க்கு (7.8 mmol/L) குறைவாக இருக்க வேண்டும்.
போஸ்ட் பிராண்டியல் (உணவுக்கு பின்) இரத்த க்ளுக்கோஸ்

இரத்த க்ளுக்கோஸை ஏன் கண்காணிக்க வேண்டும்?
நீரிழிவு நோயாளர்களுக்கு இரத்த க்ளுக்கோஸை கண்காணிப்பது முக்கியமான ஒன்றாகும். காரணம், சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது இரத்த க்ளுக்கோஸ் அளவு எதிர்வினை ஆற்றுகிறதா என்பதை புரிந்துகொள்ள இது உதவும்.
இரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது ஏன் அவசியம் என்பதற்கான சில காரணங்கள் இதோ:
நீரிழிவு நோயை நிர்வகிக்க: இரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது நிரிழிவு நோயை நிர்வகிப்பதில் மிக முக்கிய கருவியாகும். நீரிழிவு நோயுள்ளவர்கள் இரத்த க்ளுக்கோஸ் அளவிடும் கருவிகள் கொண்டு தங்கள் ரத்த க்ளுக்கோஸ் அளவை பார்த்து அதற்கிணங்க தங்கள் சிகிச்சைத் திட்டங்களை சரிபடுத்திக்கொள்ளலாம்.
ஹைப்போ க்ளைசீமியாவை தவிர்க்க: ஹைப்போ க்ளைசீமியா அல்லது குறைவான இரத்த க்ளுக்கோஸ் என்பது நிரிழிவு நோய்க்கான சிகிச்சையின் ஒரு பொதுவான பக்க விளைவாகும். நீரிழிவு நோயுள்ளவர்கள் ரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது, ரத்த க்ளுக்கோஸ் அளவு மிக குறைவாவாதை அடையாளம் கண்டு ஹைப்போ க்ளைசீமியாவை தவிர்க்க உதவும்.
ஹைப்பர் க்ளைசீமியாவை தவிர்க்க: ஹைப்பர் க்ளைசீமியா அல்லது உயர் இரத்த க்ளுக்கோஸ் என்பது நிரிழிவு நோய்க்கான சிகிச்சையின் ஒரு பொதுவான பக்க விளைவாகும். நீரிழிவு நோயுள்ளவர்கள் ரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது, இரத்த க்ளுக்கோஸ் அளவு மிக அதிகம் உயர்வதை அடையாளம் கண்டு ஹைப்பர் க்ளைசீமியாவை தவிர்க்க உதவும்.
சிகிச்சையை சரிப்படுத்த: இரத்த க்ளுக்கோஸ் கண்காணிப்பு, நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்கள் ரத்த க்ளுக்கோஸ் அளவை வைத்து, தங்கள் சிகிச்சை சரிபடுத்திக்கொள்ள உதவும். உதாரணமாக, ஒருவரது இரத்த க்ளுகோஸ் அளவு தொடர்ச்சியாக உயர்வாக இருந்தால், அவரது மருத்துவ சேவையாளர் மருந்துகளின் அளவை சரிப்படுத்தியோ, வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரை செய்தோ, இரத்த க்ளுக்கோஸ் அளவை குறைவாக்கலாம்.
சிக்கல்களை தவிர்க்க: இரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது, குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து உயர்வாக நீடிக்கும் இரத்த க்ளுக்கோஸ் அளவால் ஏற்படக்கூடிய நரம்புச் சேதம், சீறுநீரகச் சேதம் மற்றும் விழிச் சேதம் போன்ற சிக்கல்களை நீரிழிவு நோயுள்ளவர்கள் தவிர்க்க உதவலாம்.
சுருங்கச் சொன்னால், இரத்த க்ளுக்கோஸ் அளவை கண்காணிப்பது, நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்கள் நோயை நிர்வகிக்கவும், ஹைப்போ க்ளைசீமியா மற்றும் ஹைப்பர் க்ளைசீமியாவை தவிர்க்கவும், சிகிச்சைகளை சரிப்படுத்தவும், சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கவும் முக்கியமானதாகும்.
மெட்யூகோ மூலம் இரத்த க்ளுக்கோஸ் பதிவுகளை கண்காணிப்பது
மெட்யூகோ நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு, இரத்த க்ளுக்கோஸ் பதிவுகளை கண்காணிக்க உதவும் ஒரு மொபைல் செயலியாகும். மெட்யூகோவை இரத்த க்ளுக்கோஸ் பதிவுகளை கண்காணிக்க பயன்படுத்துவது இப்படித்தான்.
உங்கள் திறன்பேசி அல்லது கைக்கணினியில் மெட்யூகோ செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
செயலியை திறந்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து, புதிய கடவுச்சொல்லை உருவாக்கி, புதிய கணக்கை உருவாக்குங்கள்.
உங்கள் பெயர், பிறந்தநாள் போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்யுங்கள்.
உங்கள் பதிவுகளை, நீங்களே செயலியில் உள்ளீடு செய்யலாம்.
அளவீட்டு கருவியைப் பயன்படுத்தி உங்கள் இரத்த க்ளுக்கோஸ் பதிவை எடுத்து அதை செயலியில் பதிவு செய்யுங்கள். அந்நாளின் எந்த நேரம், மருந்து எடுத்துக்கொண்டீர்களா மற்றும் என்ன உணவு அருந்தினீர்கள் போன்ற சில குறிப்புகளையும் நீங்கள் இந்தப் பதிவோடு சேர்த்துக்கொள்ளலாம்.
இச்செயலி, உங்கள் பதிவுகளை சேமித்து, காலப்போக்கில், உங்கள் இரத்த க்ளுக்கோஸ் போக்குகளை வரைபடமாக உருவாக்கித் தரும்.
மொத்தத்தில், மெட்யூகோ நீரிழிவு நோயுள்ளவர்கள் தங்கள் ரத்த க்ளுக்கோஸ் பதிவுகளை கண்காணிக்கவும், தங்கள் நோயை நிர்வகிக்கவும் அவர்களுக்கு பயனுள்ள கருவியாக அமையும். எனினும், இரத்த க்ளுக்கோ கண்காணிப்பு என்பது நீரிழிவு நோய் நிர்வாகத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், எப்போதும் உங்கள் மருத்துவ சேவையாளரிடம் ஆலோசனை பெற்று உங்களுக்கு உரித்தான சிறந்த சிகிச்சைத் திட்டத்தை தீர்மானிக்க வேண்டும்.