உயிர்வாயு அளவு என்றால் என்ன?
உங்கள் ரத்தத்தில் எந்த அளவில் உயிர்வாயு உள்ளது என்பதை குறிப்பதே உயிர்வாயு அளவு ஆகும். உங்கள் உடலின் அணுக்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் சரியாக செயல்படுவதற்கு உயிர்வாயு அவசியமாகும். எனவே ஆரோக்கியமான உயிர்வாயு அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம்
ஆரோக்கியமான உயிர்வாயு அளவு என்பது பொதுவாக 95% முதல் 100% என்ற அளவில் அமையும். 90% குறைவான பதிவு, குறைவானதாக கருதப்படுவதோடு, நுரையீரல் நோய் அல்லது இரத்தத்தில் போதிய உயிர்வாயு இல்லாத நிலையை குறிக்கும் ஹைப்போக்ஸிமீயா இருப்பதை குறிக்கலாம்.
உங்கள் உயிர்வாயு அளவை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. இருக்கும் இடத்தின் கடல்மட்ட உயரம், புகைப்பழக்கம், காற்று மாசுபாடு மற்றும் உங்கள் உடலின் மருத்துவ நிலைமைகள் போன்றவை அவற்றில் அடக்கம். ஒருவேளை உங்களுக்கு சுவாசம் சார்ந்த சிக்கல்கள் உள்ள மருத்துவ நிலைமை இருந்தாலோ, உங்கள் உயிர்வாயு அளவை பாதிக்கக்கூடிய மருத்துவச் சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டாலோ, உங்கள் உயிர்வாயு அளவை கண்காணிப்பது முக்கியமானதாக அமையக்கூடும்.
உயிர்வாயு அளவை கண்காணிக்கும் வழிமுறைகளில் ஒன்று பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியாகும். இந்த சின்னக்கருவியை உங்கள் விரலில் மாட்டிக்கொண்டால், உங்கள் உயிர்வாயு நிறை அளவை நீங்கள் கண்டறியலாம். உங்கள் உடல்நலப் பராமரிப்பு வல்லுனர் உங்கள் இரத்த மாதிரியைக் கொண்டும் உங்கள் உயிர்வாயு அளவை கண்டறிய முடியும்.
உங்கள் உயிர்வாயு அளவு பற்றி உங்களுக்கு ஏதும் ஐயமோ, கவலையோ இருந்தால், ஒரு உடல்நலப் பராமரிப்பு வல்லுனரை அணுகி அவரிடம் உரையாடுவது முக்கியமாகும். அவர்கள் உங்கள் உயிர்வாயு அளவு பற்றி விளக்கம் அளித்து, உங்களுக்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கி, ஆரோக்கியமான உயிர்வாயு அளவை சீராக வைத்துக்கொள்ளவும், உங்கள் உடலில் இருக்கும் உள்ளார்ந்த மருத்துவ நிலைமைகளை நிர்வாகம் செய்யவும் உதவுவார்.
உயிர்வாயு அளவு வகைகள்
தமனி உயிர்வாயு
மருத்துவச்சூழல் அல்லது மருத்துவம் சார்ந்து கண்காணிக்கப்படும் உயிர்வாயு என்பது பெரும்பாலும் ஒரே வகை மட்டுமே. அது தமனி உயிர்வாயு நிறை (SaO2), அல்லது (SpO2) அல்லது வெறுமனே உயிர்வாயு நிறை என்று அழைக்கப்படும். இது, தமனியில் செல்லும் ரத்தத்தில் உயிர்வாயு பிணைந்த ஹீமோக்ளோபின் விழுக்காட்டு அளவை குறிக்கும். அதாவது உடலின் திசுக்களுக்கு கொண்டு செல்லப்படும் உயிர்வாயு அளவை உணர்த்தும்.
இயல்பான தமனி உயிர்வாயு அளவு 95 – 100% என்ற அளவில் அமையும். 90% –க்கு குறைவாக உயிர்வாயு அளவு அமைவது சற்றே கவலைக்கொள்ள வேண்டிய நிலை, காரணம் இது இரத்தத்தில் குறைவான அளவில் உயிர்வாயு இருப்பதை குறிக்கும் ஹைப்போக்ஸிமீயா போன்ற மருத்துவ நிலைமை இருப்பதை குறிக்கும். 80% குறைவாக உயிர்வாயு அளவு இருப்பது, உயிருக்கே ஆபத்தாகும்.
இதர உயிர்வாயு அளவுகள் வேறுபட்ட சூழல்களில் பயன்படுத்துப்படுவதுண்டு. உயிர்வாயு பகுதி அழுத்தம் (PaO2) அல்லது காற்றில் உள்ள உயிர்வாயு செறிவு அளவு (FiO2) போன்றவை அவற்றில் சில. இருப்பினும் இவை பொதுவாக நம் உயிர்வாயு அளவை தடம் காணவோ, கண்காணிக்கவோ பயன்படுத்தப்படுவதில்லை. (PaO2) என்பது இரத்தத்தில் எவ்வளவு உயிர்வாயு கரைந்துள்ளது என்பதை கணக்கிடும், மேலும் இது இதயநோய் மற்றும் சுவாச நோய்களை சோதனைக்கூட பரிசோதனை மூலம் கண்டறியவும் கண்காணிக்கவும் அளவிடப்படும். (FiO2) என்பது ஒருவர் சுவாசிக்கும் காற்றில் உள்ள உயிர்வாயுவின் செறிவை அளவிடும். இது பெரும்பாலும் மருத்துவமனைகள் அல்லது விமானங்களில் ஒருவேளை தேவை ஏற்படும் சூழல்களில் தரப்படக்கூடிய கூடுதல் உயிர்வாயு அளவை இது குறிக்கும்.
ஏன் உயிர்வாயு அளவை கண்காணிக்க வேண்டும்?
உங்கள் உடல் சீராக இயங்குவதற்கு உயிர்வாயு அவசியம், எனவே உங்கள் உயிர்வாயு அளவை கண்காணிப்பது மிக முக்கியமானதாகும். உங்கள் உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் தொடர்ச்சியான உயிர்வாயு தேவை உள்ளது. அப்போதுதான் அவை தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து, அவற்றின் செயல்பாட்டை சீராக ஆற்றமுடியும்.
ஹைப்பாக்ஸ்மீயா எனும் குறைவான உயிர்வாயு அளவு மோசமான உடல்நலச் சிக்கல்களை உருவாக்கக்கூடும். உங்கள் உடல் போதிய உயிர்வாயுவை பெறவில்லை என்றால், மூச்சுத்திணறல், குழப்ப மனநிலை, சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். உரிய சிகிச்சை அளிக்காத பட்சம் அளிக்காதபட்சம் ஹைப்பாக்ஸிமீயா, உறுப்புச்சேதம் மற்றும் இறப்புக்கும் கூட வழிவகுக்கும்.
பிரச்சனையாக மாறக்கூடியவற்றை முன்கூட்டியே அடையாளம் காண, உங்கள் உயிர்வாயு அளவை கண்காணிப்பது உதவும். இல்லையெனில் இது தீவிரமான உடல்நலச் சிக்கல்களாக மாறக்கூடும். மேலும் ஒருவேளை உங்கள் உயிர்வாயு அளவை சீராக்கி நிர்வகிக்க, நீங்கள் ஏதேனும் மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால் அதன் பலன் மற்றும் செயல்திறனை தடங்காணவும் இது உதவும்.
ஆஸ்துமா அல்லது COPD எனும் நெடுங்கால சுவாச அடைப்பு நோய் போன்ற சுவாசச்சிக்கல்கள் உள்ளவர்கள், சில இதயம் சார்ந்த சிக்கல்கள் உள்ளவர்கள், கடல்மட்டத்திலிருந்து உயர்வான இடத்தில் வாழ்பவர்கள் ஆகியோர் குறைவான உயிர்வாயு அளவு ஏற்படும் அபாயம் கொண்டவர்கள் ஆவர். இவர்களில் நீங்கள் ஏதேனும் ஒரு பிரிவில் உள்ளவர்களா இருந்தால், உங்கள் உயிர்வாயு அளவை கண்காணிப்பது மிக மிக முக்கியமானதாகும்.
உங்கள் உடல்நல பராமரிப்பு வல்லுனர் நீங்கள் உங்கள் உயிர்வாயு அளவை கண்காணிக்க வேண்டுமா, எப்படியான கால அளவில், எத்தகைய இடைவெளிகள் அதை கண்காணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உங்களுக்கு உதவக்கூடும். மேலும், உங்கள் உயிர்வாயு அளவை பற்றி புரிந்துகொள்ள உதவி, தேவையான மருத்துவச்சிகிச்சை அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி பரிந்துரைத்து, நீங்கள் உங்கள் உயிர்வாயு அளவை சீராக வைத்துக்கொள்ள உதவலாம்.
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் சார்ந்து, குறிப்பாக உங்களுக்கு நுரையீரல் சார்ந்த சுவாசச் சிக்கல்கள் தரக்கூடிய மருத்துவ நிலைமை இருக்கும் பட்சம் அல்லது உங்கள் உயிர்வாயு அளவை பாதிக்கக்கூடிய மருத்துவச்சிகிச்சை ஏதேனும் நீங்கள் மேற்கொள்ளும் பட்சம், உங்கள் உயிர்வாயு அளவின் பதிவுகளை தடம் காண்பது அவசியமானதாக அமையக்கூடும்.
பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள்: பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்பது உங்கள் விரலில் மாட்டிக்கொள்ளும் ஒரு சின்னக்கருவியாகும். இது உங்கள் உயிர்வாயு நிறை அளவை கணக்கிடும். இவற்றில் சில வகை உங்கள் இதயத்துடிப்பையும் தடம் காண உதவும். இதர சில ஆக்ஸிமீட்டர்கள் உங்கள் பதிவுகளை சேமித்து, உங்கள் பதிவுகள் சார்ந்து ஒரு குறிப்பிட்ட கால அளவில் அதன் போக்கு பற்றிய தரவையும் உங்களுக்கு வழங்கும்.
இந்த பதிவுகளை நீங்கள் மெட்யூகோ செயலியில் குறித்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் உயிர்வாயு அளவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது அதன் போக்குகளை அடையாளம் காண ஏதுவாகும்.
உயிர்வாயு அளவை நீங்கள் தடம் காணும் போது, நீங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்கள் உயிர்வாயு அளவை கணக்கிடுவது அவசியம். மேலும் உங்கள் உடல்நல பராமரிப்பு வல்லுனர் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதும் முக்கியம். உங்கள் உடல்நலப் பராமரிப்பு வல்லுனரை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை கொண்டு செல்லவேண்டும். இதன் மூலம் அவர் அதை மீளாய்வு செய்து உங்களுக்கான பிரத்யேக பரிந்துரைகள் வழங்கி உங்கள் உயிர்வாயு அளவை சீராக நிர்வாகம் செய்ய உதவுவார்.
உங்கள் ஒட்டுமொத்த உடல்நலனில், உயிர்வாயு அளவை கண்காணிப்பது விரிவான அணுகுமுறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். நலமான உணவுக்கட்டுப்பாடு, சீரான உடலியக்கம் அல்லது உடற்பயிற்சி, மன அழுத்தத்தை சீராக்கி நிர்வகிப்பது, மிகையான புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்ப்பது போன்றவையும் இதர முக்கிய பகுதிகளாகும்.
மெட்யூகோ மூலம் உயிர்வாயு அளவு பதிவுகளை தடம் காண்பது